நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும். அதற்கமைய தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைய பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏனைய மாகாணங்களின் சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கும் பின்னர் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இதன்போது 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலநிலை தொடர்பில் மீனர்வர்கள் மற்றும் கடற்படையும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
மேலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் கடும் மழை பெய்வதனால் மண்சரிவு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண் சரிவு ஆபத்துக்கள் காணப்பட்டால் உடனடியாக அந்த பிரதேசத்தை விட்டு வெளியேறுமாறு பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.