மாகந்துரே மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட மற்றுமொருவர் இன்று (24) அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
வெள்ளம்பிட்டியவைச் சேர்ந்த 52 வயதுடைய அபு பக்கர் மொஹமட் என்பவரே இவ்வாறு இன்று காலை கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளார்.
இவர் தற்பொழுது கட்டுநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்கள பிரிவினால் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நேற்று நாடுகடத்தப்பட்டிருந்த பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் விசாரணையின் பின்னர் இன்று (24) காலை விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.