நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் ஸ்டீபன் ஹாப்பர்
கனடாவின் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் வெளியேறும் திகதி அறிவிக்கப்படவில்லை. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் ஒரு அறிவார்ந்த வாழ்க்கைக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரை தொடர்ந்து இவரின் முன்னாள் தலைமை ஊழியர் மற்றும் ஜெரமி ஹன்ட், ஹாப்பரின் முன்னாள் நிர்வாக உதவியாளர் மற்றும் மூத்த ஆலோசகர் ஆகியோரும் வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வார இறுதியில் வன்கூவரின் நடைபெறவுள்ள பழமைவாத கட்சியின் மாநாட்டில் இது குறித்த அறிவிப்பினை ஸ்டீபன் ஹாப்பர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த இலையுதிர் காலத்தில் நடந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நடைபெறும் பழமைவாத கட்சியின் முதலாவது கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது