நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) பதில் காவல்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விடுத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதிமன்றத்தினுள் பாதளா உலக தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்டமையானது, நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தால், நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி, தங்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்ததையடுத்து சபாநாயகரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.