கென்யாவில், நாடாளுமன்ற அவைக்குள் குழந்தையுடன் சென்ற பெண் எம்.பி அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
கென்யாவில் நாடாளுமன்றம் புதன்கிழமை கூடிய நிலையில், அதில் உறுப்பினராக இருக்கும் ஸூலேகா ஹாசன் என்பவர், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் தனது கைக்குழந்தையை அழைத்துக்கொண்டு நாடாளுமன்றம் சென்றார்.
ஆனால் அவைக்குள் சென்ற அவரை தடுத்து நிறுத்திய சபாநாயகர் கிறிஸ்டோபர் ஓமுலேலீ (Christopher Omulele) என்பவர், அவையில் அந்நியர்கள் வர அனுமதியில்லை என கூறினார்.
ஆனால் அவசர சூழ்நிலையிலும், உறுப்பினராக தனது கடமையை செய்யவே இங்கு வந்ததாக ஸூலேகா தன்னிலை விளக்கம் அளித்தும், சபாநாயகர் அதனை ஏற்றுக்கொள்ளாமல் அவரை வெளியேற்றினார். சபாநாயகரின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சக பெண் எம்.பிக்கள், ஸூலேகாவுக்கு ஆதராவாக அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.