நாடளாவிய ரீதியில் உள்ள 88 தேசிய பாடசாலைகளில் அதிபர் சேவை தரம் ஒன்றுக்கான பற்றாக்குறை நிலவுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தகுதி வாய்ந்த 79 அதிபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான, நேர்முகத்தேர்வு எதிர்வரும் 06ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இசுருபாயவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.