பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 குழுவினரால் நாடளாவிய ரீதியில் நேற்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பின் போது பாதாள உலக குழுக்களுடன் தொடர்புகளை பேணியதாக கூறப்படும் 22 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் களனி மற்றும் கொலன்னாவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 34,60 மற்றும் 36 வயதுடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மாதம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பேலியகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பதலன்கல,மீகொடை , கம்புருப்பிட்டிய மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 32,41,36,40,31 மற்றும் 42 வயதுடைய ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் இதுவரை பாதாள உலக குற்றக் குழுக்களைச் சேர்ந்த 731 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.