நாடளாவிய ரீதியில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்க கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் கேகாலை மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்களை அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.