எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
2002 AJ129 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த விண்கல் பூமிக்கு சுமார் 74 இலட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை நெருங்கி வரும்.
நாசாவின் வகைப்பாட்டின் படி, பூமியின் சுற்றுப்பாதையின் 0.05 வானியல் அலகுகளில் விண்கற்கள் எங்கும் பயணம் செய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய பெரிய விண்கல் பூமியை தாக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக்கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், பெப்ரவரியில் நெருங்கி வரும் விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கற்கள் பூமியைத் தாக்கும் அபாயம் இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.