ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் குறித்த உரையாடல் நிகழ்வு சென்னையில் நடிகர் நாசர் தலைமையில் இடம்பெறவுள்ளது.
அண்மையில் வெளியாகிய பயங்கரவாதி நாவலுக்கு உலக அளவில் வாசகர்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். கிளிநொச்சியிலும் அண்மையில் இந் நாவல் வெளியிடப்பட்டது.
இந் நிலையில் நாவலை வெளியிட்டுள்ள சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் ஏற்பாடு செய்துள்ள பயங்கரவாதி நாவல் உரையாடல் நிகழ்வில் இயக்குனரும் நடிகருமான நாசர் ஓவியரும் திரைக் கலை இயக்குனருமான மருது, கவிஞர் மண்குதிரை, எழுத்தாளர் தீபச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் உரையாற்றுகின்றனர்.
சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் வரும் ஞாயிறன்று 12ஆம் திகதி மாலை 5.30மணிக்கு இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
