மிகவும் மர்மமான இருப்பை கொண்ட எர்த் ஸ்டார் அல்லது நேமிசீஸ் அல்லது நிப்ரூ அல்லது பிளான்ட் எக்ஸ் என்றழைக்கப்படும் மர்மமான கிரகமானது நமது சூரியனின் இரட்டை என்று ஒரு வானியல் மற்றும் நிலநடுக்கவியலாளர்களின் குழு நம்புகிறது. அது புவியின் மிகவும் சக்திவாய்ந்த விசையால் ஈர்க்கப்படுகிறதாம். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, நிப்ரூ கிரகத்தின் இருப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட அந்த பிளாக் ஸ்டாரை கண்டுபிடிக்கும் வேட்டையில் மில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்த வண்ணம் உள்ளதென்பதும், அந்த தேடலை இன்றும் நிறுத்திக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிருந்து தான் சந்தேகமும், அதன் அடிப்படையிலான பீதிகளும் கிளம்புகிறது.!
பூமி கிரகத்தின் டெக்டோனிக் தட்டுகள் மோதல் நிகழ்த்த, எரிமலைகள் வெடிக்குமென்றும் – இந்த ஆர்மெக்கெடோன் () நிகழ்வானது வருகிற நவம்பர் 19-ஆம் தேதியன்று நிகழுமென்றும் அந்த வானியல் மற்றும் நிலநடுக்கவியலாளர்களின் குழு தெரிவித்துள்ளது.
“இந்த பேரழிவு நிகழ்வானது பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து அலாஸ்கா மற்றும் ரஷ்யா, அமெரிக்க வெஸ்ட் கோஸ்ட், இந்தோனேசியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையிலான பகுதிகளை அழிப்பதோடு, மில்லியன் கணக்கான மக்களையும் பாதிக்கும்” என்கிறது அந்த குழு.!
நிப்ரூ என்பது சூரியனையும் மற்றும் சில கிரகங்கள் மற்றும் நிலவுகளையும் கொண்டிருக்கும் ஒரு சிறிய சூரிய மண்டலமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது. மேலும் அது நமது சூரியனை 3600 ஆண்டுக்கு ஒரு முழு சுற்று என்ற நம்பமுடியாத சுற்றுவட்ட பாதையை கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அந்த நிகழ்வு வரப்போகும் வாரங்களில் நடக்குமென்றும், அதன் விளைவாய் பூமியில் தாக்கங்கள் ஏற்பட்டு பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் நிகழுமென வானியல் அறிவிப்புகளை நிகழ்த்தும் வலைத்தளமான பிளான்ட்நியூஸ்.காம் அறிவித்துள்ளது.உடன் இந்த நிகழவே மிக நெருக்கமாக பின்பற்றி வருவதாகவும் அறிவித்துள்ளது.
பழுப்பு குள்ள வகை கிரகமான நிப்ரூ மிகவும் சிறிய ஒளி மற்றும் ஆற்றலை வெளிக்கிடுவதால் அதன் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதென்பது மிகவும் சவாலான ஒரு காரியமாகும். 1980-களின் பிற்பகுதி தொடங்கி இன்று வரையிலாகவே இதுவொரு கோட்பாட்டு பொருள் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுகையில் நிப்ரூ சார்ந்த பீதிகள் கிளம்புவது இதொன்றும் முதல் முறையல்ல. “நிப்ரூ பற்றிய கதைகள் பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்போது கிளம்பும் பீதிகள் புதிய கதையமைப்புகளில் மறுசுழற்சி செய்யப்பட்டே வருகின்றன” என நாசா கருத்து தெரிவித்துள்ளது.
இதேபோன்ற பேரழிவு பீதிகள் கடந்த 2003-ஆம் ஆண்டு மே மாதத்தில் தொடங்கியதையும், பின்னர் அது 2012-ஆம் ஆண்டை ஒரு ‘டூம்ஸ்டே’ ஆண்டாக சித்தரித்ததையும் நாசா சுட்டிக்காட்டுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் கூட இதேபோன்றதொரு சதியாலோசனை கோட்பாடு கிளம்பியது என்பதும், அந்த கோட்பாட்டின் அடித்தளமும் நிப்ரூ தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.