இல்-து-பிரான்சுக்குள் உள்ள 33 தொடரூந்து நிலையங்களுக்கு இலவச கழிவு கூடம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாக உள்ளது. இந்த சேவை நவிகோ பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
தானியங்கி கதவு மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த கழிவறை, நவிகோ பயனாளர்களுக்கு இலவசமாகவும், ஏனைய பயணிகளுக்கு 50 சதம் கட்டணம் அறவிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நவிகோ காந்த அட்டை மூலம் கழிவறை கதவு திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 87 நிலையங்களில் இந்த நிலையத்தில் இது முதல்கட்டமாக செயற்படுத்தப்பட உள்ளது.
மேலும், புதிதாக இந்த தானியங்கி கதவுகளை கொண்ட 33 புதிய கழிவறைகள் அமைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.