விஜய்யின் அதிரடி தமிழ் ஹிட் படமான மெர்சல் வரும் நவம்பர் 9-ம் தேதி ஆந்திரா, தெலங்கானா மற்றும் உலகெங்கும் வெளியாகிறது.
விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் மெர்சல். அட்லீ இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.vஅதுவே படத்துக்கான விளம்பரமாகவும் அமைந்துவிட, பலரும் இந்தப் படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற கேள்வியோடு படத்துக்குச் சென்றனர். இதன் விளைவு, திரையிட்ட இடங்களெல்லாம் மெர்சல் வெற்றியைப் பெற்றது. சென்சார் பிரச்சினை மெர்சல் வெளியான அதே தேதியில் அதன் தெலுங்கு டப்பிங்கான அதிரிந்தியை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் சென்சார் பிரச்சினை தொடர்ந்ததால் படத்தை வெளியிட முடியவில்லை. கடந்த வாரம் வெளியிட தேதி அறிவிக்கப்பட்டும், சென்சார் சான்று கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. யுஏ சான்று இந்த நிலையில் நவம்பர் 2-ம் தேதி படத்துக்கு யு ஏ சான்று வழங்கியது ஆந்திர தணிக்கைக் குழு. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது தேனாண்டாள் நிறுவனம். அதன்படி வரும் நவம்பர் 9-ம் தேதி வியாழக்கிழமை அதிரிந்தி உலகெங்கும் வெளியாகிறது.