தேர்தலை இதன்பிறகும் ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் நவம்பர் முதல் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான அரசாங்கத்தின் நடவடிக்கையை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்தவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் அதில் நம்பிக்கை வைக்க முடியாமல் உள்ளதாகவும் ஜி.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.