ஒருவரின் ஜாதகத்தில் நவக்கிரகங்களின் அமைப்பு சரியாக அமையவில்லை எனில் அவர்களின் வாழ்க்கை போராட்டமானதாகவே இருக்கிறது. நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
பலம் வாய்ந்த நவகிரகங்களின் ஆளுமை நமது கட்டத்தில் நன்மையாக இருந்தால் மட்டுமே நமது வாழ்க்கை இன்பமயமாக இருக்கும். ஆகவே நவகிரக தோஷத்திலிருந்து விடுபட சனிக்கிழமை தோறும் நவதானியங்களை பயன்படுத்தி சமைத்த உணவை உண்பதன் மூலம் நவகிரக தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.
சூரிய தோஷம் உள்ளவர்கள் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, காயத்ரி மந்திரம் சொல்வதன் மூலமும், ஞாயிற்றுக்கிழமையில் கோதுமையினால் செய்த உணவினை தானமாக கொடுப்பதன் மூலமும் சூரிய தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.
சந்திர தோஷம் உள்ளவர்கள் நெல் சம்பந்தமான உணவுகளை தானமாக கொடுக்கலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் துவரம் பருப்பினாளான உணவு வகைகளை தானமாக கொடுக்கலாம்.
புதன் தோஷம் உள்ளவர்கள் புதன்கிழமையில் பச்சை பயிறை தானமாக கொடுக்கலாம்.
குரு தோஷம் உள்ளவர்கள் வியாழக்கிழமை அன்று கொண்டைக்கடலையை தானம் செய்யலாம்.
ராகு தோஷம், நாகதோஷம் உள்ளவர்கள் கருப்பு உளுந்தை தானமாக கொடுப்பதன் மூலம் திருமண தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.
கேது தோஷம் உள்ளவர்கள் துறவிகள் மற்றும் மகான்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் சிறந்த பலனைப் பெறமுடியும்.
சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று எள் விளக்கு ஏற்றி பூஜை செய்ய வேண்டும்.
இவ்வாறு நவ கிரகங்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும் பிடித்த நிற வஸ்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை தானமாக கொடுப்பதன் மூலமும் நவதானிய பிரசாதத்தை நவகிரகங்களுக்கு படைத்து, விளக்கு ஏற்றி பூஜை செய்வதன் மூலமும் நவகிரக தோஷ பாதிப்பிலிருந்து விடுதலை பெறமுடியும். ஒருவரின் ஜாதகத்தில் இந்த கிரகங்களின் அமைப்பையும், தோஷத்தையும் சரி செய்தால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை பலவித ஏற்றங்களை பெற முடியும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]