வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலயப் பெருந்திருவிழா ஆரம்பமாகியது. வழமைபோன்று அல்லாது இந்த முறை கடும் பாதுகாப்புக் கெடுபிடி
களுக்கு மத்தியில் கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னைய காலங்களைப் போல்லல்லாது இந்தமுறை ஆலயச் சூழல் முழுவதும் கடும் பாதுகாப்புக் கெடுபிடிகள் காணப்பட்டன. பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னம் அதிகமாகக் காணப்பட்டது. ஆலயத்துக்கு வந்த பக்தர்கள் அனைவரும் உடல் மற்றும் உடமைச் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டே வழிபாட்டுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதனால் காத்திருக்க வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஆலயத்துக்குள் செல்வதற்குக் காலைக் கழுவுவதற்காகவும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
இந்தச் சோதனை நடவடிக்கைகளால் ஆலயத்துக்கு வந்தவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருந்ததையும், சோதனை நடவடிக்கைகளால் அவர்கள் விசனம் அடைந்திருந்தமையையும் காணமுடிந்தது. விரதத்துடன் வந்தபலர் இந்தக் கெடுபிடிகளால் மிகக் களைப்படைந்தவர்களாகக் காணப்பட்டனர்.
ஆலயத்துச் செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.