பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக நடிகை நயன்தாரா உடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘கூழாங்கல்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில் கூழாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்று வருகிறது. இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் பிரபலம் கவின் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#No 1 TamilWebSite
