அதர்வாவின் அக்காவாக முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். நயன்தாராவின் கணவராக சாதுவான கதாபாத்திரத்தில், விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையை மும்பையை சேர்ந்த த்ரிஷா மீடியா லிமிடெட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.