அண்ணாத்த படத்தின் ‘சாரக்காற்றே’ பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று 2வது பாடல் வெளியிடப்பட்டது. ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
ரஜினி – நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]