நம்பிக்கையை விதைப்பாரா பிரவுன்?
ஒன்டேரியோ கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக பேட்ரிக் பிரவுன் தெரிவு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவுற உள்ளது.
இந்த ஓராண்டில் மட்டும் பிரவுன் ஆயிரக்கணக்கானோரை சந்தித்துள்ளார். தாம் சார்ந்த கட்சியினரை ஊழல் கறை படியாமல் பார்த்துக்கொண்டுள்ளார். இருப்பினும் பிரவுன் மீதான நம்பிக்கை அவரது கட்சியினருக்கு இல்லை. எந்த திட்டங்களும் இல்லாத நபராகவே அவரது கட்சியினர் பிரவுனை பார்த்து வருகின்றனர்.
2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் கட்சியில் சுமார் 40,000 புது உறுப்பினர்களை சேர்த்து கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை அதிரவைத்தவர் பிரவுன். கடந்த சில ஆண்டுகளில் கட்சியின் தீவிர போக்கான முடிவுகளில் பிரவுன் தம்மை இணைத்துக்கொண்டது இல்லை. ஆனால் இனி கொள்கைகள் மற்றும் உத்திகளை வகுத்து தமது கட்சியை வரவிருக்கும் தேர்தலுக்கு தயார்படுத்த வேண்டும்.
கன்சர்வேடிவ் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்து தனியார் அமைப்பு ஒன்று கடந்த மாதம் ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் லிபரல் கட்சியினரை விடவும் 5 புள்ளிகள் மட்டுமே முன்னிலையில் உள்ளது கன்சர்வேடிவ் கட்சி. ஏப்ரல் மாதத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 39 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர். லிபரல் கட்சியினருக்கு 34% ஆதரவு இருந்தது தெரிய வந்தது.
இதே அமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் பொதுமக்களிடையே பிரவுனுக்கு இருக்கும் வரவேற்பு என்பது 27 சதவிகிதம் என்ற நிலையில், பிரவுன் மீது கருத்து தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு அவர் பரிச்சயமானவர் அல்ல என 48 விழுக்காடு கருத்து தெரிவித்திருந்தனர்.
பார்ரி பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் பிரவுன் மீது நல்ல கருத்து எதுவும் பொதுமக்களுக்கு இருந்ததில்லை. மட்டுமின்றி கொள்கை சார்ந்த முடிவுகள் எடுப்பதில் பிரவுன் எப்போதுமே தடுமாறியது மட்டுமல்ல அது தோல்வியில் முடியுமட்டும் மெத்தனமாக செயல்பட்டுள்ளார்.