பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.
14 அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகின்றது. எதிர்வரும் 21 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதி சபாநாயகரிடம் இந்த பிரேரணை சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கூட்டு எதிர்க் கட்சி அறிவித்துள்ளது.