நம்பர் 1 வீராங்கனைகள் சந்தித்த அதிர்ச்சி தோல்வி!
சிங்கப்பூரில் உலக டென்னிஸ் போட்டி தொடர் நடந்து வருகிறது. இதில் சில மாதங்கள் பிரிந்திருந்த உலகின் நம்பர் 1 ஜோடிகளான இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணை இந்த போட்டியில் இணைந்தது.
இன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் எகடிரினா மகரோவா மற்றும் உக்ரைனின் எலினா வெஸ்னினா இணையை சானியா, ஹிங்கிஸ் இணை எதிர் கொண்டது. மிகவும் விறுவிறுப்பக நடந்த இப்போட்டியில் 6-3, 2-6, 6-10 என்ற செட் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்ற சானியா ஜோடி, மீண்டும் சிறந்த ஜோடி என இணைந்தததால் சானியா இணைதான் வெற்றி பெறப்போகின்றனர் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினர். ஆனால் அடுத்தடுத்த செட்களில் 2-6, 6-10 என்று எதிரணி செட்களை கைப்பற்றியதால் சானியா ஜோடி ஏமாற்றமளித்தது.