நண்பருக்காக இத்தனை கோடி விட்டுக்கொடுத்தாரா விஜய் சேதுபதி?
விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவர் நடிப்பில் இந்த வருடம் இறைவி படத்தை தவிர மற்ற அனைத்து படங்களும் ஹிட் தான்.
றெக்க படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் எங்கும் குறை வைக்கவில்லை, இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதியின் நண்பராம்.
இவர் ஏற்கனவே ஆரஞ்சுமிட்டாய் படத்தை தயாரித்தவர், அந்த படத்தின் நஷ்டத்திற்காக தான் இந்த படத்திற்கு கால்ஷிட் கொடுத்தாராம்.
அதுமட்டுமின்றி றெக்க படத்திற்காக சுமார் ரூ 4 கோடி வரை விட்டுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.