நட்சத்திர வீரரை கட்டி அணைத்த ரசிகர்: பரபரப்பு வீடியோ!
பிரித்தானியாவில் நடந்த பிரீமியர் லீக் சாம்பியன்ஸ் கால்பந்து போட்டியின் போது திடீரென ரசிகர் ஒருவர் அதிரடியாக மைதானத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Old Trafford மைதானத்தில் நடந்த போட்டியில் உள்ளுர் அணியான மன்செஸ்டர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் லீசெஸ்டர் அணியை வீழ்த்தியது.
மன்செஸ்டர் வெற்றியை வீரர்கள் கொண்டாடி கொண்டிருந்த போது திடீரென ரசிகர் ஒருவர் அதிரடியாக மைதானத்தில் நுழைந்து மன்செஸ்டர் அணியின் நட்சத்திர வீரர் ஸலாடன் இப்ராஹிமோவிக்கை கட்டி அணைக்க முற்பட்டார்.
உடனே பாதுகாப்பு படையினர் மைதானத்தில் நுழைந்து ரசிகரை அப்புறபடுத்தி மைதானத்திற்கு வெளியே அழைத்துச் சென்றனர்.
இச்சம்பவத்தின் மூலம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், குறித்த போட்டியில் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிக் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.