கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கேரளாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மக்கள் மிகப்பெரிய பாதிப்படைந்தனர். இதில் திரையுலகை சேர்ந்தவர்கள் தங்கள் பங்காக தனித்தனியாகவும் கூட்டாகவும் வெள்ளநிவாரண நிதி வழங்கினார்கள். இருந்தாலும் மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ நட்சத்திர கலைவிழா நடத்தி அதன் மூலம் கிடைக்கும் தொகையை வெல்ல நிவாரண நிதியாக அரசாங்கத்திடம் வழங்க உள்ளது.
இதற்காக துபாயில் வரும் டிச-7ஆம் தேதி பிரமாண்ட கலைநிகழ்ச்சி நடத்தப்போவதாகவும் அறிவித்தது. இதில் கலந்துகொள்ளும் நட்சத்திரங்கள் ரிகர்சலில் பங்கேற்பதற்கு வசதியாக அவர்கள் நடித்துவரும் படப்பிடிப்புகளை நிறுத்தி ரிகர்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என நடிகர் சங்கம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால் அதை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பாமல், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ளது. இது தயாரிப்பாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே வெள்ளத்தால் தான் தங்களது படப்பிடிப்பு, பட ரிலீஸ் ஆகியவை ஒருமாதத்திற்கும் மேலாக தடைபட்டன.
அதனால் மிகப்பெரிய நட்டத்தை சந்தித்ததாக கூறும் அவர்கள் தற்போது நடத்திவரும் படப்பிடிப்புகளை நிறுத்தினால் இன்னும் அதிகமான இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் நடிகர் சங்கத்தின் முடிவை ரிகர்சளுக்காக படப்பிடிப்பை நிறுத்துவதில்லை என முடிவெடுத்துள்ளார்களாம்.