நடுவானில் விமானத்தில் புகுந்த பாம்பு! அலறியடித்து ஓடிய பயணிகள்: அதிர்ச்சியூட்டும் வீடியோ
மெக்ஸிக்கோவின் Torreon பகுதியிலிருந்து தலைநகர் மெக்ஸிக்கோவிற்கு பயணித்த Aeroméxico 230 என்ற விமானத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியார் ndalecia Medina Hernandez சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.
அதில், விமானத்தின் மேல்பகுயில் உள்ள பெட்டியிலிருந்து பச்சை நிறத்தில் ஐந்தடி பாம்பு ஒன்று சறுக்கி கீழே விழுகிறது.
பாம்பை கண்டவுன் பயணிகள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி மற்ற பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாம்பு பயணிகளிடையே புகுந்தவுடன் அனைவரும் அலறியடித்து ஓடுகின்றனர்.
அதிர்ஷ்டவசமாக, விமான குழுவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை முன்னதாகவே மெக்ஸிக்கோவில் தரையிறக்கும் படி விமானியிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து, விலங்கு கட்டுப்பாடு அதிகாரிகள் விமானத்தில் வந்து பாம்பை பிடித்துச் சென்றுள்ளனர். எனினும், பாம்பு கொடிய வகை பாம்பா என அறியப்படவில்லை.
சம்பவம் குறித்து மெக்ஸிக்கோ விமான நிறுவனமும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.