உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்ட மீனவர் ஒருவரை கரைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை கடற்படையினர்கள் உதவி செய்துள்ளனர்.
நீண்ட நாள் மீன்பிடிக்காக, கடந்த 28ஆம் திகதி திருகோணமலை கொப்பெ மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சென்றிருந்த மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த மீனவருக்கு உடனடியாக சிகிச்சைகள் தேவைப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸாருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 8.5 கடல் மைல்கள் தூரத்தில் மீன்பிடி படகு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகான P 465 அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் பாதிக்கப்பட்ட நபர் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.