கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடிகை தமிதா அபேரத்னவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கோட்டா கோ கம போராட்டத்தில் பங்கேற்ற தமிதா அபேரத்வை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
அத்தோடு தமிதாவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமித்தா அபேரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதவான் திலின கமகே, தலா 500,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆர்ப்பாட்டத்தின் போது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் தமித்தா அபேரத்ன கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.