இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் ஜூகி சாவ்லா. இவர் பல மொழி படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார். இவர் 1991-இல் வெளியான நாட்டுக்கு ஒரு நல்லவன் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் திரைப்படங்களை தாண்டி சமூக சேவை, சுற்றுச்சூழல் என சில முன்னெடுப்புகளையும் எடுத்து வந்தார்.
சமீபத்தில் இவர் 5 ஜி சேவை அமல் படுத்தப்பட்டால் உயர் மின் காந்த அலைகள் காரணமாக மனிதர்கள், விலங்குகள் பாதிக்கப்படும் என கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் இவர் தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை ஜூகி சாவ்லாவுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து இந்த அபராத தொகையை குறைக்க கோரி ஜூகி சாவ்லா மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, ஜூகி சாவ்லாவுக்கு விதிக்கப் பட்ட அபராத தொகையை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக குறைத்து உத்தர விட்டுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]