நடிகைகளுடன் ரகசிய தொடர்பா? கிசுகிசுக்கு விளக்கம் கொடுத்த ஷாருக்கான்
உலகளவில் மிக பிரபலமான நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான். இவரை பற்றி அவ்வப்போது பல பெண்களை தொடர்ப்பு படுத்தி கிசுகிசு வருவதுண்டு, இந்நிலையில் தன்னைப்பற்றி எழும் கிசு கிசுக்களுக்கு நடிகர் ஷாரூக்கான் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “நான் ஒரு நடிகன். சுமார் 20 வருடங்கள் இந்த துறையில் இருக்கிறேன். உலகின் மிக அழகான பெண்களுடன் நடித்திருக்கிறேன். நான் வெளிநாட்டிலும், என்னுடன் நடிக்கும் நடிகைகளுடனும் ரகசிய தொடர்பு வைத்துக் கொண்டதாக வதந்திகளை பரப்பினார்கள்.
இது போன்ற செய்திகள் எந்த விதத்திலும் என்னை பாதிக்காது, என் மனைவி கவுரியையும் பாதிக்காது. என்னைப் பற்றி என் மனைவிக்கு நன்றாக தெரியும். நான் என்னுடைய வேலையை தவிர வேறு எதையும் கவனிக்க எனக்கு நேரம் இல்லை என்பதை என் மனைவி அறிவார்.
எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்தால், அது எங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையே என்பதைப் பற்றியதாகத்தான் இருக்கும். எனவே கிசுகிசுக்களைப் பற்றி நான் கவலைப்படவேண்டியதில்லை” என்றார்.