நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் மக்களவை தேர்தலுக்கான வாக்களிப்பு நேற்று (19) தொடங்கியுள்ளது.
வாக்கை பதிவு செய்ய வந்தவேளை
இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த வாக்களிப்பின்போது நடிகர் விஜய் நேற்று தனது வாக்கை பதிவு செய்ய வந்தவேளை விதிமீறல் செய்ததாகவும் அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் நடிகர் விஜய் நேற்று வாக்களிக்க வந்தபோது விதிமுறைகளை மீறி 200க்கும் மேற்பட்டவர்களுடன் வந்ததாகவும் அதனால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும் அதனால் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.
நிச்சயம் நடவடிக்கை
இந்த மனு மீது விசாரணை நடந்து வருவதாகவும் இந்த மனுவில் உண்மை தன்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
