நடிகர் ஜெய் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி! உண்மை என்ன?
நடிகர் ஜெய் தமிழ் சினிமாவின் நிறைய லவ் ஸ்டோரிகளில் நடித்து எல்லோரையும் கவர்ந்தவர்.அதிலும் குறிப்பாக இளைஞர்கள் மனதில் இடம் பிடித்து அதிகம் பேசப்பட்டவர்.
கோலிவுட்டில் நடிகை அஞ்சலியுடன் காதல் என்று கிசுகிசுக்கப்படுவதே இவரை பிரபலமாகியது.ஜோடியுடன் ஜோடிபோட்டு நடிக்கும் இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சென்னை 28 படத்தில் நடித்தவர்.
சென்னை 28 இரண்டாவது இன்னிங்க்ஷின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு இவர் வரவில்லை என்பதால் பலரும் இவரை சாடினர். ஜெய் அஞ்சலியுடன் காதல் விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்துவதால் படத்தில் ஆர்வம் காட்டுவதில்லை என குற்றச்சாட்டும் எழுந்தது.
மேலும் இவருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கும் கருத்து வேறுபாடு அதனால் ஜெய்யை ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றால் பேச்சு அடிபட்டது.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு அவரும் ஜெய்யும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது போதாதா அப்படி எல்லாம் எந்த பிரச்னையும் கிடையாது என்று சொல்ல.
Brothers 4 life @Actor_Jai