நடிகர் சுஷாந்த் சிங் டோனி ஆக மாறியது இப்படி தான்! வியக்க வைக்கும் வீடியோ
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாறு, ‘எம்.எஸ்.டோனி– தி அன்டோல்டு ஸ்டோரி’என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.
இதில் டோனியின் கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்திருக்கிறார். இவர் திரையில் டோனியை அப்படியே பிரதிபலித்துள்ளார். இது ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
ஆனால் இதற்கு பின்னால் அவரின் பல நாள் கடின உழைப்பு மட்டுமே இருந்திருக்கிறது.
டோனியின் ஹெலிகொப்டர் ஷாட்டில் இருந்து, அவரின் உடல் அசைவு வரை அனைத்தையும் கச்சிதமாக செய்துள்ளார் சுஷாந்த். அவரின் நடிப்பை பார்த்து விட்டு டோனியும் அவரை பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் சுஷாந்த் சிங், அணித்தலைவர் டோனியை போல் கிரிக்கெட் பயிற்சிகளை மேற்கொள்வது போன்று வெளியிடப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.