நடனமாடும் போதே மயங்கிவிழுந்து உயிரிழந்த நாயகி- திரையுலகில் பரபரப்பு
மராத்திய திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்த பிரபலமான நடிகை அஸ்வினி. இவர் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் நடனமாடும் போது மேடையிலேயே திடீரென கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஸ்வினி மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மராத்திய திரைத்துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.