நடனமாடிய பெண்ணின் மீது பணத்தை தூவிய பொலிசார்-வைரலாகும் வீடியோ
உத்திரபிரதேச மாநிலம் மான்புரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பொலிஸ், அங்கு நடனமாடிய பெண்ணின் மீது பணத்தினை தூவிய வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
மான்புரி நகரில் வைத்து கலை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியை ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்,
இந்த நிகழ்ச்சியில், பெண்மணி ஒருவர் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தார், அப்போது, ஒரு நபர் எழுந்துவந்து பணத்தினை அப்பெண்ணின் மீது தூவிசெல்கிறார்,‘
அதன்பின்னர், பொதுமக்களோடு சேர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த பொலிஸ் ஒருவர் சிரித்தபடியே எழுந்து வந்து அப்பெண்ணின் மீது பணத்தினை தூவிச்செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
யூன் 16 ஆம் திகதி நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.