தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பொதுமக்கள் அனைவரும் சோதனையின் பின்னரே பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பாதுகாப்புக்காகவே சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கூட்டமைப்பின் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று இடம்பெற்றது. பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற பொதுமக்கள் அனைவரும் உடல்சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களது உடைமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கூட்டத்துக்கு வருகை தந்த பின்னரே பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை நிறுத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்புக் கருதியே சோதனை நடவடிக்கை தம்மால் முன்னெடுக்கப் பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.