தோல்வியை தாங்கமுடியாத வங்கதேச வீரர்: பகையை மறந்து ஆறுதல் கூறிய இங்கிலாந்து வீரர்
இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது. டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டி கடந்த 20 ஆம் திகதி சிட்டாகாங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் வங்கதேச அணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தது, இதனால் டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாதனை படைக்கும் என ரசிகர்கள் மட்டுமில்லாமல் வங்கதேசத்தைச் சேர்ந்த முன்னணி வீரர்களும் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வங்கதேச அணி தோல்வி அடந்தது. வங்கதேச அணி சார்பில் சிறப்பாக ஆடிய ரகிம் வங்கதேச அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மைதானத்தில் சற்று நேரம் தலை குணிந்த படியே இருந்தார்.
இதை கவனித்த இங்கிலாந்து வீரர் ரூட் அவரை தட்டிக் கொடுத்து வெற்றி தோல்வி எல்லாம் சகஜம் என்பது போல் அவருக்கு ஆறுதல் கூறியதைக் கண்ட வஙகதேச ரசிகர்கள் அனைவரும் ஆரவாரம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு அணிகளும் மோதிய ஒரு நாள் தொடரின் போது வங்கதேச வீரர்களும், இங்கிலாந்து வீரர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
தற்போது அது எல்லாம் ஒன்றும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கிலாந்து வீரர் ரூட் செயல்பட்டிருப்பது இரு அணி வீரர்களிடையே ஒருவித நட்பை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.