அண்மையில் இடம்பெற்ற ஐ.பி .சி தமிழா நிகழ்வு இத்தனை கோடி பணத்தை செலவிட்டும் கனடா கலைஞர்கள் அனைவரின் மனங்களையும் வெல்லமுடியாமல் போய்விட்டது .
ஏட்டிக்கு போட்டியாக கலைஞர்களை தூண்டி விட்டு, கூத்து பார்ப்பவர்களை பொறுப்பாக நியமித்து பணத்தை வீணாக்கி மற்றோரின் பழிச்சொல்லை கேட்டதுதான் மிஞ்சி இருப்பது .
கனடாவில் இருக்கும் இருவர் மற்றவர்களை தூர விரட்ட போட்டதிட்டமே குழப்பங்களை ஏற்படுத்த காரணம் .
நிகழ்வில் கூட ஏனைய சக கலைஞர்களை ,ஊடகங்களை கொச்சைப்படுத்த திட்டமிட்டு நகைச்சுவை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமை மிகவும் வருந்ததக்க விடயம். ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஆதரவாக, வழிகாட்டியாக செயர்ப்படவேண்டியவர்கள் தனிப்பட்ட ஒருசிலரின் கருத்துக்களை கேட்டு அவர்களை பின்தொடர்ந்து ஒட்டுமொத்த கனடா மக்களையும் கலைஞர்களையும் நோகடித்துவிட்டனர்.
நிகழ்வுகளை கூட மற்றைய ஊடகங்களை கொச்சைப்படுத்தும் விதமாக நடாத்தியமை வருந்த தக்கது.
மக்கள் மயப்படுத்தப்படாத நிகழ்வாகவும், அதேநேரம் வியாபார நோக்கத்துக்காவும் கொண்டுவந்த நிகழ்வாக இந்த நிகழ்வை இவர்கள்இருவருமே மாற்றினார்கள் .இவர்கள் இருவராலும் மட்டுமே ஒட்டுமொத்த ஒற்றுமையும் கெடுக்கப்பட்டது .
கனடா கலைஞர்கள் அனைவரும் ஆவலுடன் வரவேற்க காத்திருந்த நேரம் இந்த இரு நபர்களாலும் நிகழ்வு சோகை இழந்தது .
பொருத்தமற்றவர்கள் கடமைகளை பொறுப்பேற்றமையால் அரிய நிகழ்வு இறுதிநேரம் இலவச அனுமதிகளை வழங்கவேண்டிய நிலைக்கு சென்றது .
அரிய நிகழ்வை அனைவரும் ஒன்றுபடவிடாமல் தடுத்த இந்த நபர்களை ஐ.பி .சி தலைமை புரிந்துகொள்ளத்தவறியது வருந்த தக்கது .
காலப்போக்கில் ஐ.பி.சி யின் செயற்பாடுகள் அனைவரும் விரும்பும்படியாக தகுந்தவர்களை உள்வாங்கி நடத்தவேண்டும். அதற்க்கு ஒட்டுமொத்த வர்த்தகர்கள் ,கலைஞர்கள் ஊடகங்கள் எல்லோரும் சேர்ந்து தயாராகவே இருக்கின்றனர் . “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ”
(நிகழ்வை தரமற்றதாக்கியவர்கள் )