ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் ஒருபோதும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவருக்கு தேசியப் பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என அக்கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருக்கு தமது கட்சி உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வந்தவுடனேயேதான் ஒழுக்காற்று விசாரணை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் மேலிடுவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டிலான் பெரேரா, எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக ஸ்ரீ ல.சு.க. அறிவித்துள்ள ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் ஸ்ரீ ல.பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையில் செஹான் சேமசிங்க எம்.பி. இதனைக் கூறியுள்ளார்.