தொலைக்காட்சியை பார்வையிட முற்பட்ட பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த குடும்பப் யாழ்ப்பாணம், கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி (வயது 59) ஆவார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தொலைக்காட்சியை பார்ப்பதற்காக ஆழியை அழுத்திய போது அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. பெண்ணின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரண விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.