தொடர்மாடிக்கட்டிடங்களில் புகைத்தல் தடை! சட்ட பூர்வமாக வயது 21ஆக உயர்வு!.
தொடர்மாடிக்கட்டிங்களின் உள்ளே மற்றும் post-secondary பாடசாலை வளாகங்களில் புகைத்தல் தடை அத்துடன் புகையிலை பொருட்களை வாங்குவதற்கான சட்டபிரகார வயதெல்லையை 21ஆக உயர்த்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒட்டாவா கருதுகின்றது.
பிப்ரவரி 22-ல் கனடா சுகாதார பிரிவினரால் வெளியிட்ட பத்திரிகை பிரகாரம் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் கனடியர்கள புகைப்பதாகவும் இது கனடாவின் மக்கள் தொகையின் 15-சதவிகிதம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் புதிய திட்டம் புகைப்பவர்களின் தொகையை 2035ல் மக்கள் தொகையின் ஐந்து சதவிகிதத்திற்கும் குறைவாக செய்வதாகும்.
பன்முக வாசஸ்தலங்களின் உள்ளே-தொடர்மாடிக்கட்டிடங்கள் மற்றும் கூட்டுரிமை வீடுகள் பகுதிகளில் புகைத்தலை தடை செய்வதன் ஒரு யோசனை புகை கூடங்களில் மற்றும் மற்றய குடியிருப்பு தொகுதிகளில் சென்றடையலாம் அதே போன்று தான் post-secondary பாடசாலை வளாகங்களிலும்.
பல post-secondary பாடசாலை வளாகங்களில் பலதரப்பட்ட புகைத்தல் தடை விதிகள் உள்ளன. அவ்வப்பகுதி மாகாண அல்லது மாநகர விதிகளிற்கமைய இவ்விதிகள் அமைகின்றன.
புகைத்தல் ஓவ்வாமை கொண்ட குறிப்பாக ஆஸ்துமான இருப்பவர்கள் வளாகங்களில் புகைத்தல் தடையை பாராட்டுகின்றனர்.
Wilfrid Laurier பல்கலைக்கழகம் எந்த ஒரு பல்கலைக்கழக கட்டிடங்களிலிருந்தும் 10மீற்றர்கள் தூரத்திற்கு புகைத்தலை தடைசெய்கின்றது.
மற்றொரு திட்டமிடப்பட்டுள்ள மாற்றம் புகையிலை பொருட்களை வாங்குவதற்கான வயதெல்லை தற்சமயம் 18 மற்றும் 19ஆகும். இந்த எல்லை 21 ஆக மாற்றப்படும். ஹவாய் மற்றும் கலிபோர்னியா அடிச்சுவட்டை பின்பற்றியே இந்த மாற்றம்.
புகைத்தலினால் அகால மரணங்கள் தொடர்வதாக கலந்துரையாடல் மூலம் தெரிய வருகின்றது.புகைத்தல்-சம்பந்தப்பட்ட நோய்களினால் வருடாந்தம் 37,000 மக்கள் இறக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய மத்திய புகையிலை கட்டுப்பாட்டு உத்தி 2018 மார்ச் காலாவதியாகின்றது. இதற்கு முன்னராக இம்மாற்றம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
கனடிய சுகாதார பிரிவு கனடியர்களிடமிருந்து கருத்துக்களை எதிர்பார்க்கின்றது. முன்மொழியப்பட்ட மாற்றம் ஏப்ரல் நடுப்பகுதியில் வரலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.