இலங்கையில் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நோர்டிக் நாடுகள் சார்பில் உரையாற்றிய பின்லாந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காகவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவும் இலங்கை உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஆதரிப்பதாக பின்லாந்து தெரிவித்துள்ளது.