தொடரும் புல்லரிப்பு கோமாளிகளின் தொல்லை.
கனடா-கியுபெக் மாகாண பொலிசார் வாலிபன் ஒருவன் கோமாளி ஆடை அணிந்து ஒருவரை தாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என உறுதிப்படுத்தியுள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற புல்லரிப்பை ஏற்படுத்தும் கோமாளிகளின் தோற்றப்பாடு கியுபெக் மற்றும் வடஅமெரிக்கா பூராகவும் அறிவிக்க பட்டனவற்றுடன் தொடர்புடையன போன்று தெரிவதாக பொலிசார் தெரிவித்தனர்.
கோமாளி ஆடையில் இருந்த சந்தே நபர் மொன்றியலில் இருந்து 30கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் வாலிபர் கூட்டமொன்றை பயமுறுத்த முனைந்ததாகவும் ஆனால் அவர்களில் ஒருவர் நிலத்தில் விழுந்த போது தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் அருகில் உள்ள ரவுனிற்கு தப்பி ஓடிவிட அங்கு மற்றுமொரு சந்தேகநபர் இன்னுமொரு இளைஞர் கூட்டத்தை பயமுறுத்தி உள்ளான்.