தொடரி ரிலீசை நிறுத்தி வைத்த தனுஷ் – ஏன்?
பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ் – கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் தொடரி. இப்படத்தை மிகுந்த பெருட்செலவில் தயாரித்துள்ளது சத்யஜோதி நிறுவனம்.
கடந்த மாதம் பிரம்மாண்டமாக பாடல் வெளியீட்டு விழாவை நடத்திய தயாரிப்பு நிறுவனம், படத்தை இந்த மாதம் வெளியிட முடிவு செய்தது.
ஆனால் தனுஷ் தனது மாமனாரின் கபாலி படம் வெளிவருவதால் படத்தை இப்போது ரிலீஸ் செய்யவேண்டாம் அடுத்த மாதம் செய்யலாம் என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளாராம்.