நியமன கடிதங்கள் பெற்ற அரச அதிகாரிகள் தேர்தல் கடமைக்கு சமூகமளிக்க தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கடமைகளில் ஈடுபடாத அரசியல் அதிகாரிகளுக்கு எதிராக, அரசியல் யாப்பின் 104ஆவது உறுப்பபுரிமைக்கு அமைய 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராம் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்துவதற்காக தெரிவுசெய்யப்பட்ட அரச வாகனங்களை, அரச அதிகாரிகள் விடுவிக்க மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.