தேர்தலை நடாத்துவதை தொடர்ந்தும் ஒத்திவைத்து வருவது பயங்கரவாதத்தைப் போன்ற ஒரு தவறான நடவடிக்கையாகும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையானது தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒரு காரணம் அல்லவெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பிட்ட நாளில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடாத்தாது போனால், தான் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக கூறிய அறிவிப்பு, தொடர்ந்தும் செல்லுபடியானது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.