கொழும்பு கார்டினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் 70 ஆவது பிறந்த தினத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கச் சென்ற களுத்துறை கந்துபொட ஸ்ரீ விவேகாராம மகா விகாரையின் விகாராதிபதியை கைகூப்பி கும்பிட்டு வரவேற்றுள்ள நிகழ்வு ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எமது நாட்டு கத்தோலிக்க மக்களின் பிரதம தலைவர்களுள் ஒருவராக விளங்கும் பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்ஜித் கர்தினால், சகோதர மதத் தலைவரை இவ்வாறு வரவேற்றுள்ளமை இதற்குக் காரணம் என பரவலாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.