தேய்காக்காக அறிமுகப்படுத்தப்பட்ட நிர்ணய விலை நடைமுறைப்படுத்தப்படுகிறா என்பதை கண்டறியும் நடவடிக்கை இன்று திங்கட்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.
தேங்காய் ஒன்றை விற்பனை செய்யக் கூடிய ஆகக்கூடிய சில்லறை விலை 75 ரூபாவாகும். இந்த விலை இன்று திங்கட்கிழமை வர்த்தமானியில் அறிவிக்கப்படவுள்ளது என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யக்கன் டாவல தெரிவித்துள்ளார்.
நிர்ணய விலைக்கு மேலதிகமாக தேய்காய் விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அதிகாரம் இதன் பின்னர் கிடைக்கும் என்று தலைவர் தெரிவித்தார்.
சமீபத்தில் கூடிய வாழ்க்கை செலவு குழு மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக நிர்ணய விலை தீர்மானிக்கப்பட்டது.
சில வர்த்தகர்கள் நியாயமன்ற வகையில் தேய்காயின் விலையை அதிகரித்தமையினால் நிர்ணய விலை பிரகடனப்படுத்தப்பட்டதாக என்று தெங்கு உற்பத்தி சபையின் தலைவர் கபில யக்கன் டாவல மேலும் தெரிவித்தார்.