புது மணத்தம்பதிகள் தங்களது தேனிலவிற்காக குலியாபிட்டியில் அமைந்துள்ள அதி சொகுசு விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் முன் பதிவு செய்த அறையின் கதவில் சிறிய துளைகள் இரண்டு இருப்பதை படுக்கைக்கு செல்லும் வேளையில் கண்டதாகவும் நடு ராத்திரியில் அவ் விடுதி ஊழியர் ஒருவர் கதவின் துளைகள் வழியே தங்களை வீடீயோ எடுத்ததாகவும் குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த விடுதிக்கு சென்று பார்த்த போது புதுமணத்தம்பதிகள் குறிப்பிட்டதைப் போன்று அறையின் கதவில் முழு அறையையும் பார்க்கும் வகையில் துளைகள் இடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் ஆரம்ப பரிசோதனைகளில் அறை முழுவதையும் பார்க்கும் வகையில் துளைகள் போடப்பட்டுள்ளமை தெரிய வந்ததும் பொலிஸார் தடையவியல் பொலிஸ் குழுவை சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர்.
தடையவியல் பொலிஸார் தொடர்ந்து செய்த பரிசோதனைகளில் புதுமணத்தம்பதிகள் தங்களது தேனிலவை கலித்த குறித்த அறையின் அருகில் அமைக்கப்பட்டுள்ள தேனிலவுக்கு என வழங்கப்படும் ஏனைய அறைகளிலும் இது போன்ற துளைகள் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதோடு குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தொடர்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக புதுமணத்தம்பதிகளின் உறவினர்கள் கருத்து தெரிவிக்கையில் “ நாங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே குறித்த விடுதியை எங்கள் பிள்ளைகளுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம், அவர்களின் வாழ்க்கையை ஆரம்பிக்கும் வீடியோ காட்சிகள் வெளி வருமாயின் அது அவர்களது வாழ்க்கையை மட்டுமல்லாது எங்களது குடும்பத்தையே அது பாதிக்கும், மேலும் வாழ்க்கையை ஆரம்பித்துள்ள புதுமணத்தம்பதிகளின் வாழ்க்கை இப்போதே முடிந்து விடும். அதனால் அதிகாரம் மிக்க அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்தோடு வீடியோ காட்சிகள் எதுவும் வெளி வராத படியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக விடுதி நிர்வாகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் “ குறித்த புதுமணத்தம்பதிகள் தங்களது அறை ஒதுக்கீட்டிற்காக முன் பணம் மட்டும் செலுத்தி உள்ளனர் மிகுதி பணம் செலுத்த வில்லை அதை கொடுக்காமல் தவிர்ப்பதற்கே இவ்வாறு புரலிகளை பரப்பி விடுகின்றனர்” என தெரிவித்தனர்.