தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அழித்தது என தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
பிரபாகரனையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களே அழித்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் வலுவாக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து பதவிகளோ அரசியல் அனுகூலங்களோ பெற்றுக்கொள்ள முடியாது.
இதனால் தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றிய உளவுத் தகவல்களை அரசாங்கத்திற்கு வழங்கி, புலிகளை அழித்தனர்.
பிரபாகரன் இன்னும் மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்திருந்தால் நோர்வே அரசாங்கத்தின் பேச்சுவார்த்தைக்கு அமைய 13ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு புதிய அரசியல் அமைப்பிற்கு ஆதரவளித்திருக்கக்கூடும் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்து கொண்டனர்.
இதன் காரணமாகவே பிரபாகரனை அழிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழியமைத்தனர் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.